'செஞ்சுடர் சாரதிகள்' அகப்பக்கத்திற்கு வருக!!!

Thursday, September 22, 2011

காற்று


உன் தாய் உனை வெறுத்தாலும்

நண்பன் உனை ஒதுக்கினாலும்

உன் காதலன் உனை மறந்தாலும்

நீ வாழும் வரை உன்னை வெறுக்காமல், ஒதுக்காமல், மறக்காமல்

உனை தழுவிச்செல்லும்……

நீ சுவாசிக்கும் உன் மூச்சுக் காற்றே



இ. புஷ்பவள்ளி

பொன்மொழிகள்

1. ஒரு விரோதி இன்னொரு விரோதிக்குச் செய்யும் தீமையை விட, தவறான வழியில் செல்லக்கூடிய நம் மனமே நமக்கு மாபெரும் தீமையைச் செய்கிறது

-புத்தர்-

2. தான் செல்ல வேண்டிய வழியில் முதலில் மனிதன் தன்னை செலுத்த வேண்டும். அதற்குப் பின்பே பிறர்க்கு போதனை செய்ய வேண்டும்

-புத்தர்-

3. "வயலுக்கு கேடு களைகள், மனித வாழ்வுக்கு கேடு அவனது ஆசைகள்"

-புத்தர் -

4. உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

-விவேகானந்தர்-

5. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

- விவேகானந்தர்-

6. அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது. துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.

-சாலமன்-

7. கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.

-ப்ராங்க்லின்

8. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்

. - கர்னல் கீல்



மா. நித்தியவாணி